Coming back alive !!

தோன்றியதை எழுத வேண்டும் என்று மெனக்கெட்டபிறகு மறுபடியும் எங்கோ தொலைந்து விட்டேன்.. மீண்டும் தொடரலாம் என்ற முனைப்போடு திரும்பி வந்துள்ளேன்.

Coming back alive !!

நான் வருவேன் !!

ராவணன் படத்திற்கு முடிவுரை அளிக்கும் பாடல் ..  ரஹ்மானின் குரலில் உயிர் பெரும் அருமையான வரிகள் !

நான் வருவேன்…

மீண்டும் வருவேன்..

உன்னை தொடர்வேன்..

உயிரால் தொடுவேன் !

ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?

அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா?

அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது

வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது

அழுது கொண்டு பூமி வந்தோம்

சிரித்து கொண்டே வானம் போவோம் !!

ராவணன்

படம் வெளிவந்த இரண்டாம் நாள் முதல் தடவை பார்த்தபோது மணி சார் சொல்லவந்ததை சரியாக சொல்லாமல் விட்டுவிட்டரோ என்ற பரிதவிப்பு. ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன் அவர்கள் . பிரித்வியும் கார்த்திக்கும் காட்டிற்குள் நுழையும் முதல் காட்சியிலேயே  அவர்களை பார்ப்பதற்கு பதில் பின்னிருக்கும் காட்டையே பார்க்க வைத்த பிரம்மாண்ட ஒளிப்பதிவு படம் முழுவதும்.

இசைப்புயலின் பின்னணி இசை –Class. வெகு நாள் கழித்து ரஹ்மானின் trademark drum beats ( கெடக்கரி அடுப்புல ..).  வசனங்கள் மணி சார் படத்திகேற்ப சிறியநெளிவுகளோடு இருந்தாலும் பலம் இல்லை.  . சுஜாதாவை நெருங்க கூட முடியவில்லை சுஹாசினியால். படத்தொகுப்பு சிறப்பு.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளி வரும் பெரிய படங்களின் வெற்றியையோ தோல்வியையோ  அந்த எதிர்பார்பே  ஒரு விதத்தில் முடிவு செய்கின்றன. அதுவும் மிகவும் பரிச்சியமான படப்பெயர்கள் மற்றும் கதைகளங்கள் கொண்ட திரைப்படங்களை ஒவ்வொரு சினிமா ரசிகனும் வெவ்வேறு பரிமாணத்தில் யோசனை செய்வான். அப்படி இருக்கும்போது இயக்குனரின் பார்வையும் ஒரு சராசரி ரசிகனின் பார்வையும் வெவ்வேறு திசைகளில்  அமைவது சாத்தியமே. மணி சார் இன் கோணத்தின் படி கெட்டவன் என்று கருதப்படும் ஒருவனிடம் உள்ள நற்குணங்களையும் கதையின் நாயகனான நல்லவனிடம் உள்ள கெட்ட குணாதிசயங்களையும் அவர்களது உண்மையான வாழ்கைதன்மை மாறாமல் நம்முன் கொண்டு வர எத்தனித்திருக்கிறார். அதை புரிந்துகொண்டவற்கு ராவணன் ஒரு ஆக்ரோஷமான மனிதனின் மனதுற்குள் கூட்டி செல்லும் ஒரு அற்புதமான பயணம்.

இதிகாசத்தில் ராமன் ஒளிந்து நின்று அம்பெய்வதர்க்கும் ராவணன் கடைசிவரை  சீதையை தொடாமல் இருந்ததற்கும் பரிணாம வளர்ச்சி நிமித்தமும், சமய நிர்பந்ததிற்காகவும் பல கரணங்கள் சொல்லி நல்லவனை முற்றிலும் நல்லவனாகவும் கெட்டவனை முற்றிலும் கெட்டவனாகவும் பார்த்து வந்திருக்கும்  நமக்கு நிச்சயமாக ஏற்று கொள்வதற்கு சற்று நெருடலாக இருக்கலாம். கற்பனைக்கு எட்டததை உணர்ந்து கொடுப்பவந்தான் உண்மையான படைப்பாளி.

உண்மையாகவே நேற்று இரண்டாம் முறை ராவணன் பார்க்கும் பொழுதுதான் இந்த எண்ணங்களும் , முதல் பாதியில் உள்ள நுணுக்கங்களும் நிறைய புரிந்தன. Something like connecting the dots backwards.  இந்த கடினமான கதாபாத்திரத்தை எளிதாக எடுத்து அழகாய் கொடுத்த விக்ரமிற்கு ஒரு சபாஷ்.

முடிவில் அந்த ரஹ்மானின் “ நான் வருவேன்..” … மொத்த  படத்தின் highlight .  ஒரு முறை பார்த்தவர்கள் இரண்டாம் முறை பார்த்து தெளிந்துகொள்ளவும்.

ராவணன் – விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் !!

True friendship does not demand frequent calls and sharing every minute things of life. And all that frequent calls and sharing things sometimes does not help with some people to get in to the harmony of friendship. The essence of friendship is such relation where you get struck with the mind-blowing frequency, feel very happy when you see them and feel sad when they leave somewhere. A friendship which does not expect and never complaints about anything is heaven. All this whole lot of gyans is here because I felt all this when I met Sathya yesterday after some time to see him off. He left to US yesterday… Take care man.

Celebrating 10 years of togetherness – II

Spirit2 pm. On a weekday I was sitting inside class room during my 2nd year of my engineering and yes obviously the class was going on.I heard that racket for which I was waiting for a long time. I expected that machine to bring to a halt in front our class room. But it roared and went in to the opposite direction.  I said to myself”Not againnnn” .And no more build-ups after this…I was talking about my chota blue colored Bajaj Spirit here and in my last blog. She was just not my college bike..(Using the word “Bike” would be little too much though) its our college bike…Someone or the other used to get that bike from me in the morning and I see my machine in the road driven by unknown people who had sub-ocee fied my vehicle. She was moiled and toiled for the sake of our friendship. Be it the triples trip where me, sathya, prathap used to go from anna nagar to their places everyday or the shunting trips from my college to Aarthy restaurant; she had always boosted our energy and had played vital role in our togetherness. There are quite a lot of instances where I still remember.  She’s been with me from the all the bad times to good times.. She’d been a tiny driving force for the crush I had in my college (College machi..sagajamthaaane ) since that girl also had the same bike. She has helped many to attend interviews and get that magical letter which decided their fate. She had never tripped me off in the road but still all the cracks and dents I see in her reminds me of my friends who had decorated her with that. I drove her for about 30 kms every day in the highway for about three years and she’s always been at my best control. She had visited a couple of police stations as well 🙂  and had been my logo when someone gave a card to wish my birthday with the bike drawn in the card.

Some might feel that this blog is more of exaggeration. But for me, this is a small tribute for her ;-).

Yesterday I went to my local mechanic with her and told “அண்ணா , light எரிய  மாட்டுது ..அத  மாத்திட்டு  battery புதுசா  போட்டுடுங்க ..அப்டியே  lite a water service பண்ணிடுங்க ”..the mechanic told..”பண்ணிடலாம்  sir.. நீங்க  முதல்ல  இத  தள்ளி  விடுங்க .. நீங்க  சொல்லி  வெச்ச  Yamaha RX ready பண்ணிடலாம் ”..I just smiled at him and asked “Battery வாங்க  எவ்ளோ  ஆகும் ?”

Celebrating 10 years of togetherness…

When I first saw her with my sister, I was little commoved with her captivating gestures. I kept thinking how my life would be if she is travelling along with me. She has got the best looks… She has got so much of inner strength in her… She is fresh…What else I can expect for a crazy guy like me at that instance of  life.

My life so far with her… Coming up in this page very soon.

ஓடும் காலங்கள் , உடலோடும்  நினைவுகள் ,
வழி  மாறும்  பயணங்கள் , தொடர்கிறதே ….
இதுதான்  வாழ்க்கையா ? , ஒரு துணைதான்  தேவையா ?…
மனம் ஏனோ  என்னையே , கேட்கிறதே …
காதல் இங்கே ஓயிந்தது ,
கவிதை ஒன்று  முடிந்தது ,
தேடும்  போதே  துலைந்தது  அன்பே

– ஆயிரத்தில் ஒருவன்

நேற்று  வரை  வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை ,
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை .
ஒரே  ஒரு நாளில்  முழு  வாழ்கை  வாழ்ந்தேனே !

– வாமணன்

COORG பயணம் 

“ஏண்டா பரதேசி, trailer ஓட்டுன 1-2  வாரத்துல படம் வரனும்டா..1 மாசம் கழிச்சு வந்த படம் flop ஆயிடும்டா” ன்னு நீங்க சொல்றது கேட்குது . என்னங்க பண்றது Receession , economy slump .:-).வேலை ஜாஸ்தி.
          நம்ம trailer ல சொன்ன மாதிரி , எக்கச்சக்க மண்டகுடைச்ச்சலோட கிளம்பினதுதான் இந்த COORG பயணம் . ” குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ” னு  அழகா நம்ம தலைவர் ராஜா ஒரு பாடு போட்டிருப்பார். அந்த பாட்டு போல இந்த குடகு மலையும் அழகா இருக்கும் னு நினச்சு போன ஏமாற்றம் தான் மிச்சம். வானிலை சிங்கார சென்னை அ விட மோசம். 3 நாட்கள் , இரண்டு இரவுகலென நீடித்த எங்கள் பயணத்தில் 2 நாட்களும் மாலை ஒரு 6 மணிக்கு மேல் வானிலை கொஞ்சம் இதமாக இருந்ததே தவிர செம்ம சூடு . மைசூர் லிருந்து காலை 8 மணிக்கு   கிளம்பி ஒரு 12 மணிக்கு சென்றடைந்தோம் .வானிலையை பற்றி இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
The gang
           இந்த பயணத்தை சுவாரசியம் ஆக்கிய விஷயங்கள் இரண்டு. ஒன்று , நாங்கள் :-). சிரிக்கதீங்கப்பா . உண்மைதான். என்னதான் மாசத்துக்கு ஒரு தடவ ஊர் சுத்தினாலும் , இந்த trip கொஞ்சம் வித்தியாசமானது. MBA காலத்துல இருந்து ஆரம்பிச்ச இந்த gang வெற்றிகரமா 6  வருடங்கள பற்பல பயங்கரமான பிரச்னையெல்லாம் தூசி தட்டுற மாதிரி தட்டி கெத்து போட்டு வந்த்ருகோம் . நிறைய சமயங்களில் எதிர்காலத்தை பற்றி பேசிக்கொள்ளும் பொழுது  கல்யாணத்து பிறகு நமது life style எப்படி இருக்கும் என்கிற topic இல் பல மொக்கைகள் போட்டிருகொம்  .அது இப்படிதான் இருக்கும் என்று யாரும் ஒரு முடிவுரை க்கு  வந்தது கிடையாது. இதுவரையில் gang ல 3 பேருக்கு கல்யாணம் ஆயாச்சு .முதல் முறையா  இந்த 3  தாய்குலங்களை கூட அழைத்து சென்று நாங்கள் எப்பொழுதும் போடும் ஆட்டமெல்லாம் ஆடி  , நிறைய பகிர்ந்து ,யார் மனதும் நோகாமல்(புதுசா கல்யாணம் ஆனவுங்க இல்ல ) வெற்றிகரமா முடித்துதான் இந்த trip இன் சிறப்பம்சம்.Karpi , joshna , chitra ஆகிய மூன்று பேரையும் பற்றி பேசும்பொழுது , dennis ” We welcome the three princess to our group ” ன்னு சொல்லி ஏத்தி விட்டதை மறக்க முடியாது :-). இதில் highlight என்னன்னா எல்லாம் காதல கல்யாணங்கள் . அதுனாலயோ என்னமோ முரண்பாடான எண்ணங்கள் யாருக்கும் இல்லை .இனிமேல்தான் இருக்குது கதை 🙂
.                 இரண்டாவது சுவாரசியம் என்று நான் சொன்னது கண்டிப்பாக சுவாரசியமான வகையில் எடுத்துக்கொள்வது  கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு 40 வயதிருக்கும் நாங்கள் தங்கிருந்த home -stay இன் பெண் உரிமையாளருக்கு. இரண்டாம் நாள் முடிவில் அந்த பெண்மணியின் தனிமையும் பேச்சையும் பார்த்து ஒரு Psycho விடம் வந்து மாடிகொண்டோமட என்று ஒரு முடிவுக்கே வந்துவிட்டோம் . அந்த அளவிற்கு இருந்தது அந்த பெண்மணியின் முரண்பாடான பேச்சும் நடவடிக்கைகளுக்கும்  . அதை பற்றி எழுதவேண்டும் என்றல் தனியாக ஒரு blog topic இல் தான் எழுதவேண்டும்.
          இன்னொரு முக்கியமான பிரச்னை coorg ல என்னன்னா , நல்ல hotel எ கிடையாது . East end என்கிற ஒரு hotel எ தவிர எல்லாம் ரோட்டு கடை ரகம் . East end hotel கு எப்ப போனாலும் ஊரே அங்கதான இருக்குது.முக்கியமான இடமான தலைக்காவேரி ஐ பார்க்க முடியவில்லை. ஒரு சின்ன ஊற்றிலிருந்துதான் காவேரி நதி துளிர்க்குமாம் . எங்க driver அங்க தண்ணியே இல்லைங்க என்று சொல்லியதால் plan ஐ cancel   செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் ground இல cricket விளையாட ஆரம்பித்து விட்டோம் . பிறகு அரை மணி நேர பயணத்தில் இருக்கும் abbey falls கு சென்று வந்தோம். சென்ற இடத்தை விட பயணித்த பாதை அழகாக இருந்தது . விண்ணுக்கும் மண்ணுக்கும் என பாதை மேலயும் கீழையும் மாறி மாறி இருந்தது. 3 ஆம் நாள் rubber boat ல rafting செம்மையா இருக்கும் என்று build -up ஓட போனோம் . rubber boat இருந்தது ஆனால் rafting செய்யுமளவிற்கு தண்ணீர் இல்லை. இருந்தாலும் கெத்து போட்டு அதை ஒட்டிக்கொண்டு மாறி மாறி race வைத்து நேரத்தை போக்கி கொண்டோம். 
           சில வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் Coorg பயணம் ,சுற்றி இருக்கும் நண்பர்களின் ஆழத்தை புரிய வைத்து , practical ஆக நிறைய விஷயங்கள் பகிர்ந்து எங்கள் நெருக்கத்தை மேலும் பலப்படுத்தியது. ஒரு நல்ல break கூட. தயவுசெய்து  யாரும் Coorg கிற்கு வெயில் காலத்தில் சென்று விடாதீர்கள் . 
      
        இதை படிப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன். 

Coorg : ஒரு சின்ன Trailer !!

ஸ்ஸ்ஸ்ஸ் … recession வந்தாலும் வந்துச்சு எங்க பார்த்தாலும் ஆப்புதான் ! இந்த வெயிலும் recession உம் சேர்ந்து குடை குடை னு குடையுது ..ஒரே குஷ்டமப்பா ..சச்சி ..இது ஒரே கஷ்டமப்பா ..lite ஆ இந்த ரெண்டையும் deal பண்றதுக்கு ரொம்ப காலமா plan ல இருந்த எங்களது coorg trip ஐ செயல்படுத்தியாச்சு … எனவே, வெகு விரைவில் ஒரு பயணக்கட்டுரை வந்துகிட்டே இருக்கு ….

தேடல்…

தினம் தினம்
ஆயிரம் முகங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அறிமுகமில்லதா என்னவளின்
புன்னகையை ….