Feeds:
Posts
Comments

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் February 27 ஆம் நாள் காலமானார் .

  சுஜாதா (இயற்பெயர் சி.ரெங்கராஜன் ) , தமிழ் படிக்க தெரிந்தோர் மறக்க முடியாத ஒரு முக்கியமான மனிதர் . இதுவரை அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் , தொடர்கதைகள் எழுதிஇருந்தாலும் சில காரணங்களுக்காக அவரை நாம் மறக்க கூடாது . மிக முக்கியமான ஒன்று , ஆங்கிலத்தில் Fiction எனப்படும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மையமாக வைத்து தமிழிலும் கதைகள் தரமாக கொடுக்க முடியும் எண்டு நிரூபித்தவர். இரண்டாவது, james bond , sherlock holmes போன்று கதாப்பாத்திரங்களை  மையமாக வைத்து தமிழிலும் பற்பல கதைக்களம் அமைக்க முடியும் என்று  தன்னுடைய கணேஷ் – வசந்த் கதாபாத்திரங்களின் மூலம் நிரூபித்தவர் . 80 களில் இந்த கணேஷ் – வசந்த கதாபாத்திரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
       இவை மட்டுமின்றி மணிரத்னமின் “ரோஜா” பட வசனங்கள் மற்றும் “கன்னத்தில் முத்தமிட்டால்”    script இல் முழுமையாக முதிர்ச்சி பெற்ற சுஜாதாவை நாம் காணலாம்.மிக நேர்த்தியான கதை வடிவமைப்பு.
   ஒரு புத்தக கண்காட்சியில் அவரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக எந்த பிரபலங்களை பார்த்தாலும் ஆட்டோகிராப் வாங்குவதென்பது எனக்கு அறவே பிடிக்காத ஒன்று. அன்று ஏதோ சுஜாதா அவர்களை பார்த்தவுடன் நான் வாங்கிய புத்தகத்தில் கையெழுத்து வாங்கலாம் எண்டு நினைத்து அவரை அணுகினேன். அவரோ அவர் எழுதிய புத்தகத்தில் மட்டுமே கையெழுத்து இடுவேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.  அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பல சிறு கதை தொகுப்பினை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ரசிகனானேன் .
அவர் இயற்கை எய்திய விஷயம் கேள்விப்பட்ட பலரின் முதல் கேள்வி “What will happen to Shankar’s “Robo” now?… 

தமிழ் மொழி அதன் உன்னத படைப்பாளிகளில் ஒருவரை இழந்து விட்டது !!!!! 

  சில விஷயங்களுக்கு  என்னதான் பதில் கண்டுபிடிச்தாலும் கொஞ்ச நேரத்தில குழம்பிடுவோம்.அந்த மாதிரி topic தான் Life’s objective ஐ கண்டுபிடிக்கிறது.  ரெண்டே நேரத்தில மட்டும்தான் எதுக்குடா வாழ்கிறோம் ..வாழ்க்கையோட அர்த்தம் தான் என்ன ?? என்று தோணும்..ஒன்னு ஒரு வேலையும் இல்லாம வெட்டியா இருக்கும்போது ..ரெண்டு எதிபார்ததது  நடக்காம போயடும்போது !! இது normal cases. சில பேர் எல்லா விஷயமும் ஒழுங்க நடந்தாலும் எப்ப பாரு “ஏன் வாழ்கிறோம்? எதுக்கு இப்படி பண்றோம் ?” னு யோசிச்சுகிட்டே இருப்பாங்க. அப்டி யோசிச்ச என்ன என்ன பதில்கள் வரலாம் என்று ஒரு வாரம் முழுக்க யோசித்ததின் (சத்தியமா பா ) விளைவுகள் தான் இந்த பதிவு…என் நண்பன் செந்தில்(Rowdy) கேட்ட கேள்விகள் இன்னொரு காரணமாவும் வைத்து கொல்லலாம்.

      பரிணாம வளர்ச்சி னு சொல்லுவாங்களே, அதையே கூட நாம நம்மாளோட வாழ்க்கைக்கு முக்கியமான குறிக்கோள் னு சொல்லலாம் .1000 வருஷத்துக்கு முன்னடி நாம இருந்ததுக்கும் , 200 வருஷத்துக்கு முன்னால நாம (மனித இனம்) இருந்ததற்கும் , இப்போ நாம இருப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் . காரணம் பரிணாம வளர்ச்சி . ஆங்கிலத்தில் சொல்ல போன Evolution னு சொல்லுவாங்க.மனித இனம் இந்த பரிணாம வளர்ச்சிய அடயிறதற்கு தெரிஞ்சோ தெரியாமயோ உதவி பண்ணிட்டு இருக்கோம். இதுக்கு மேலேயும் “நாம எதுக்கு இந்த பரிணாம வளாச்சி அடையுனும்??” னு யாரவது கேட்டீர்கள்  என்றால் பதில் கடைசியில்.

  இதற்கு ஆன்மிக ரீதியில் கூட பதில் சொல்லலாம் . “”கடவுள் இதற்க்காகதான் என்னை படைத்திருக்கிறார். இப்படித்தான் என்னை design செய்திருக்கிறார். நான் இப்படி எல்லாம் செய்ய வேண்டுமென கடவுள் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்திரிக்கிறார்.”" என்று நிறைய பேரின் எண்ணம் இருக்கிறது . நிச்சயமாக தப்பு சொல்லவில்லை. ஆனால் மனிதன் வாழ உயிர் வேண்டும், அந்த உயிர்களை பறித்து விட்டு “கடவுள் ஆணையிட்டார் ” என்று சொல்லும் பல மனிதர்களை இன்னும் இந்த உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஆக, கடவுளின் மேலே பாரத்தை போட்டு விட்டு செல்பவர்கள் சில பேர். அவர்களக்கு வாழ்க்கை என்பது கடவுள் அளித்த வாரம் , கொடுத்த வரத்தை முடிந்த அளவில் adulterate செய்யாமல் வாழ நினைப்பவர்கள் . இதுக்கு அப்புறம் ” So, do you beleive in god?” னு அடுத்த கேள்வி கேட்டீங்கன்னா பதில் கடைசியில்…

  அடுத்ததா நம்ம case .. “we should survive coz we have already  born here” .. இந்த அடுத்த ஜென்மம் ..போன ஜென்மம்… பாவங்களுக்கு தண்டனை.. புண்ணியங்களுக்கு பரிசுகள் ..இதெல்லாம் ஓரளவிற்கு கேட்டுகிட்டு வாழ்க்கை என்பதை  ஒரு phase a(birth-death)  பார்க்காம  அப்டியே ஓட்டுறது ஒரு ரகம். நம்ம மனசாட்சிய நாம சந்தோஷமா வெச்சுக்கணும் அவ்வளவுதான். இந்த மாதிரி யோசிக்க ஆரம்பித்து விட்டோம் என்றால் ரொம்ப வசதி. திடிர்னு எதோ ஒரு விஷயத்துக்கு சந்தோஷமா இருப்போம்…அடடா , அந்த நேரம் மனது மட்டும் அல்ல, அப்டியே as a whole நம்ம உடல் எல்லாமே சேந்து ஒரு சின்ன பிறவி பயனை அடைந்தது போல ஒரு பீல் இருக்கும். அப்போ யோசிசிகலாம், “ச்சே..நல்ல இருக்கே..இதுக்குதாண்டா  இந்த வாழ்க்கை”  . இத பல பேர் correct னு சொல்லுவாங்க. அட போங்கடா “சந்தோஷம் தான் வாழ்கைய ?” னு கூவுகிரவர்களுக்கு பதில் கீழே …

    இதுக்கு மேலேயும் நான் உளரனும் னு நினைகிறீங்க இல்ல… pls continue!

   முதல் வகுப்புல தமிழ் சொல்லிதர்ரங்க , நாளடைவில் நாம கவிதை எழுத ஆரம்பிக்கிறோம். சின்ன வயசுல வேதியல் (Chemistry) சொல்லி தர்றாங்க ..கொஞ்ச நாள் கழிச்சு நாம புதுசு புதுசா மாத்தி மாத்தி போட்டு எதோ கண்டுபிடிக்கிறோம். இந்த மாதிரி நாம வாழும் பயண பத்தியோ , வாழ்கைய பத்தியோ சின்ன வயசுல யாரும் சொல்லிகொடுக்கல , அதுனாலதான் ஆளுக்கு ஒரு மாத்தி யோசிச்சு இப்படி உலகத்தையே ரெண்டக்கிட்டு இருக்கோம்( அப்பாட கடைசியில கேள்வி கேட்காத அளவுக்கு உளறிட்டேன் ) .

இயற்கை இப்படி இருக்கு னு வர்ணிக்கலாம்.. இயற்கை இப்படி மாறும் என யூகிக்கலாம் ஆனால் இயற்கையை கேள்வி கேட்க முடியாது..அது போலதான் வாழ்கையும். இனிமேலும் நீங்கள் கீழே பார்க்க வேண்டிய அவசியம் இல்ல.முடிந்தது . :) )))))))))))

மனதில் பூத்தது எப்போதென்று இன்று வரை
அறியேன் நான் …
உன் கண்ணீரை கண்டு என் மனம் பதறிய போது
உணர்ந்தேன் நான்..

நீ என்னை கடந்து செல்லும் பொழுது மட்டுமே
சுவாசித்திருகிறேன் பல சமயங்களில் …

தெரியாமல் படர்ந்த உனது ஸ்பரிசத்தினால்
என் நிழலும் வெட்கப்பட்டு கண்டிருக்கிறேன் …

இரவில் பூமி சுழலும் சத்தத்தை கேட்டிருகிறேன்
மறு நாள் உனை கான நான் காத்திருக்கும்பொழுது…

காற்றில் தென்னங்கீற்று பேசும் பாஷையை புரிந்து கொண்டேன்
காற்றில் உன்  குழல் பாடும் கானங்களை  கவனித்து…

உன் ரசனைகேற்ற வாழ்க்கை வாழ பழகிகொண்டேன் ..
ஆனால் .. நீ வேறு பாதை தேடி கொண்டாய்…

நாட்கள் கடந்துவிட்டன..
உன்னை எனக்கு முழுதாக கற்றுகொடுத்த
என் தனிமையில்
இன்றும் நீ வந்து
சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ….!!!!!!!!!!!!

-வீஜே

ஆழ்ந்த நித்திரையின் போது
இந்த கொசுதொல்லையை கூட தாங்கிவிடலாம் ..
… தாங்கமுடியவில்லையடி
உன் முகம் காட்டும்  கனவை !!

- வீஜே

மழை

விடாது பெய்யும் அடைமழையில்
ஓரமாக டீ கடையில் மறைந்து
நிற்கும்பொழுது நனைந்தேன்..
..உன் ஈர விழி பார்வையில்.
-வீஜே

தவம்

 

உன் பரபரப்பான கண்கள்
எனை தீண்ட மறுக்கும்பொழுது
… நின்று விடுகிறது என் முச்சு…

—-  விஜே

தொலைபேசி சினுங்காத காலை
    நெரிசல் இல்லாத சாலை
அன்னையின் அரவனைப்பு
    சென்னை யின் வளர்ச்சி
பெற்றோர் கொடுத்த சுதந்திரம்
    நண்பர்கள் அளித்த சந்தோஷம்
தனிமை பயணம்
    முடிவில்லா கல்வி

இவையெல்லாம் நான் உணர்ந்து ரசிப்பவை

அவளையும் நேசிக்கிறேன் … ஆனால் உணராமல்!!!

–நண்பன் அருன் எழுதியதில் எனக்கு பிடித்த்து!!!

image148.jpg    

             கேரளம்- God’s Own Country என்ற tagline நிச்சயமாக மிகை படுத்த படவில்லை..அங்கே கடவுளை நேரில் கானாவிடிலும் உன்னதமான கடவுளின் படைப்பான இயற்கையை போற்றி பாராட்டி விட்டு வரலாம்.வெகு நாள் கழித்து குடும்பத்துடன் ஒரு நிம்மதியான பயணம்.

image148.jpg

           புதிதாய் பிறந்த காதலர்களின் ஊடலை போல எப்போழுதும் சினுங்கி கொண்டிருக்கும் மழைச்சாரல்… மேகங்கள் இளைப்பாறும் மலைக்குன்றுகள்… காற்றின் ஒசையும் , பறவைகளின் கானங்களை தவிர எங்கு பார்த்தலும் அமைதி..இவற்றை எல்லாம் ரசிக்க இளையராஜவின் குரல் !!!!! “மன்னில் சொர்கம்” என்ற சொல்லை தவிர  வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை.

நானே…

நட்பு…!!!

 நட்பு..

 இறைவன் சுற்றுலா செல்ல வேண்டுமாம்
அதற்காய் படைத்தான்
 நண்பர்களை..

- விஜெ

ReSPecT..

             

 

August 24th, Sathyam complex. Just before the film”Transformers” was about to begin, National Anthem was played… When everybody stood up for their country’s national anthem, I can see a couple of guys sitting leisurely and making fun of everybody who were standing .Felt like hitting them and I am sure many of us in the theatre would have felt the same. The very basic question arises here. The current age has seen an increasing trend of nationalism and patriotism becoming sheer slogans. We are gradually loosing the sense of responsibility and love that we had for our country.  Today’s education system is in such a way that we are given all education excluding the education that generates principles, patriotism and nationalism. We are slowly forgetting the importance of the nation in our lives. Since independence our brave soldiers have been laying down their lives with pride, but we consider our patriotism when India wins a cricket match and you wave the Indian Flag with grace and passion. Somebody asked me “Is Patriotism all about standing up for the national anthem or respecting Indian freedom fighters or cheering up for Indian cricket team?”. Definitely not. Its more than that like what I said “It’s in our lives”. But again, as a visual advertisement goes, “If you can’t even respect your National Anthem, how can one expect you to respect the nation? “. Think!!!-VJ

 

« Newer Posts - Older Posts »