ராவணன்   2 comments

படம் வெளிவந்த இரண்டாம் நாள் முதல் தடவை பார்த்தபோது மணி சார் சொல்லவந்ததை சரியாக சொல்லாமல் விட்டுவிட்டரோ என்ற பரிதவிப்பு. ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன் அவர்கள் . பிரித்வியும் கார்த்திக்கும் காட்டிற்குள் நுழையும் முதல் காட்சியிலேயே  அவர்களை பார்ப்பதற்கு பதில் பின்னிருக்கும் காட்டையே பார்க்க வைத்த பிரம்மாண்ட ஒளிப்பதிவு படம் முழுவதும்.

இசைப்புயலின் பின்னணி இசை –Class. வெகு நாள் கழித்து ரஹ்மானின் trademark drum beats ( கெடக்கரி அடுப்புல ..).  வசனங்கள் மணி சார் படத்திகேற்ப சிறியநெளிவுகளோடு இருந்தாலும் பலம் இல்லை.  . சுஜாதாவை நெருங்க கூட முடியவில்லை சுஹாசினியால். படத்தொகுப்பு சிறப்பு.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளி வரும் பெரிய படங்களின் வெற்றியையோ தோல்வியையோ  அந்த எதிர்பார்பே  ஒரு விதத்தில் முடிவு செய்கின்றன. அதுவும் மிகவும் பரிச்சியமான படப்பெயர்கள் மற்றும் கதைகளங்கள் கொண்ட திரைப்படங்களை ஒவ்வொரு சினிமா ரசிகனும் வெவ்வேறு பரிமாணத்தில் யோசனை செய்வான். அப்படி இருக்கும்போது இயக்குனரின் பார்வையும் ஒரு சராசரி ரசிகனின் பார்வையும் வெவ்வேறு திசைகளில்  அமைவது சாத்தியமே. மணி சார் இன் கோணத்தின் படி கெட்டவன் என்று கருதப்படும் ஒருவனிடம் உள்ள நற்குணங்களையும் கதையின் நாயகனான நல்லவனிடம் உள்ள கெட்ட குணாதிசயங்களையும் அவர்களது உண்மையான வாழ்கைதன்மை மாறாமல் நம்முன் கொண்டு வர எத்தனித்திருக்கிறார். அதை புரிந்துகொண்டவற்கு ராவணன் ஒரு ஆக்ரோஷமான மனிதனின் மனதுற்குள் கூட்டி செல்லும் ஒரு அற்புதமான பயணம்.

இதிகாசத்தில் ராமன் ஒளிந்து நின்று அம்பெய்வதர்க்கும் ராவணன் கடைசிவரை  சீதையை தொடாமல் இருந்ததற்கும் பரிணாம வளர்ச்சி நிமித்தமும், சமய நிர்பந்ததிற்காகவும் பல கரணங்கள் சொல்லி நல்லவனை முற்றிலும் நல்லவனாகவும் கெட்டவனை முற்றிலும் கெட்டவனாகவும் பார்த்து வந்திருக்கும்  நமக்கு நிச்சயமாக ஏற்று கொள்வதற்கு சற்று நெருடலாக இருக்கலாம். கற்பனைக்கு எட்டததை உணர்ந்து கொடுப்பவந்தான் உண்மையான படைப்பாளி.

உண்மையாகவே நேற்று இரண்டாம் முறை ராவணன் பார்க்கும் பொழுதுதான் இந்த எண்ணங்களும் , முதல் பாதியில் உள்ள நுணுக்கங்களும் நிறைய புரிந்தன. Something like connecting the dots backwards.  இந்த கடினமான கதாபாத்திரத்தை எளிதாக எடுத்து அழகாய் கொடுத்த விக்ரமிற்கு ஒரு சபாஷ்.

முடிவில் அந்த ரஹ்மானின் “ நான் வருவேன்..” … மொத்த  படத்தின் highlight .  ஒரு முறை பார்த்தவர்கள் இரண்டாம் முறை பார்த்து தெளிந்துகொள்ளவும்.

ராவணன் – விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் !!

Advertisement

2 responses to ராவணன்

Subscribe to comments with RSS.

  1. yes , u r right, i like that first half after seeing for second time only. this film was awesome .vikram ,aish acting was very very very good, mani rathnam and rehman oncew again prooves that they are genies.

  2. The final song – naan varuven – simply superb! oru thadava thaan paarthen padatha, but antha songa kavanichen :-)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.