படம் வெளிவந்த இரண்டாம் நாள் முதல் தடவை பார்த்தபோது மணி சார் சொல்லவந்ததை சரியாக சொல்லாமல் விட்டுவிட்டரோ என்ற பரிதவிப்பு. ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன் அவர்கள் . பிரித்வியும் கார்த்திக்கும் காட்டிற்குள் நுழையும் முதல் காட்சியிலேயே அவர்களை பார்ப்பதற்கு பதில் பின்னிருக்கும் காட்டையே பார்க்க வைத்த பிரம்மாண்ட ஒளிப்பதிவு படம் முழுவதும். இசைப்புயலின் பின்னணி இசை –Class. வெகு நாள் கழித்து ரஹ்மானின் trademark drum beats ( கெடக்கரி அடுப்புல ..). [...]
