ராவணன் படத்திற்கு முடிவுரை அளிக்கும் பாடல் .. ரஹ்மானின் குரலில் உயிர் பெரும் அருமையான வரிகள் ! நான் வருவேன்… மீண்டும் வருவேன்.. உன்னை தொடர்வேன்.. உயிரால் தொடுவேன் ! ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா? அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது அழுது கொண்டு பூமி வந்தோம் சிரித்து கொண்டே வானம் போவோம் !!
Archive for June 2010
நான் வருவேன் !! 1 comment
ராவணன் 2 comments
படம் வெளிவந்த இரண்டாம் நாள் முதல் தடவை பார்த்தபோது மணி சார் சொல்லவந்ததை சரியாக சொல்லாமல் விட்டுவிட்டரோ என்ற பரிதவிப்பு. ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன் அவர்கள் . பிரித்வியும் கார்த்திக்கும் காட்டிற்குள் நுழையும் முதல் காட்சியிலேயே அவர்களை பார்ப்பதற்கு பதில் பின்னிருக்கும் காட்டையே பார்க்க வைத்த பிரம்மாண்ட ஒளிப்பதிவு படம் முழுவதும். இசைப்புயலின் பின்னணி இசை –Class. வெகு நாள் கழித்து ரஹ்மானின் trademark drum beats ( கெடக்கரி அடுப்புல ..). [...]
