COORG பயணம்
“ஏண்டா பரதேசி, trailer ஓட்டுன 1-2 வாரத்துல படம் வரனும்டா..1 மாசம் கழிச்சு வந்த படம் flop ஆயிடும்டா” ன்னு நீங்க சொல்றது கேட்குது . என்னங்க பண்றது Receession , economy slump .:-).வேலை ஜாஸ்தி.
நம்ம trailer ல சொன்ன மாதிரி , எக்கச்சக்க மண்டகுடைச்ச்சலோட கிளம்பினதுதான் இந்த COORG பயணம் . ” குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ” னு அழகா நம்ம தலைவர் ராஜா ஒரு பாடு போட்டிருப்பார். அந்த பாட்டு போல இந்த குடகு மலையும் அழகா இருக்கும் னு நினச்சு போன ஏமாற்றம் தான் மிச்சம். வானிலை சிங்கார சென்னை அ விட மோசம். 3 நாட்கள் , இரண்டு இரவுகலென நீடித்த எங்கள் பயணத்தில் 2 நாட்களும் மாலை ஒரு 6 மணிக்கு மேல் வானிலை கொஞ்சம் இதமாக இருந்ததே தவிர செம்ம சூடு . மைசூர் லிருந்து காலை 8 மணிக்கு கிளம்பி ஒரு 12 மணிக்கு சென்றடைந்தோம் .வானிலையை பற்றி இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பயணத்தை சுவாரசியம் ஆக்கிய விஷயங்கள் இரண்டு. ஒன்று , நாங்கள்
. சிரிக்கதீங்கப்பா . உண்மைதான். என்னதான் மாசத்துக்கு ஒரு தடவ ஊர் சுத்தினாலும் , இந்த trip கொஞ்சம் வித்தியாசமானது. MBA காலத்துல இருந்து ஆரம்பிச்ச இந்த gang வெற்றிகரமா 6 வருடங்கள பற்பல பயங்கரமான பிரச்னையெல்லாம் தூசி தட்டுற மாதிரி தட்டி கெத்து போட்டு வந்த்ருகோம் . நிறைய சமயங்களில் எதிர்காலத்தை பற்றி பேசிக்கொள்ளும் பொழுது கல்யாணத்து பிறகு நமது life style எப்படி இருக்கும் என்கிற topic இல் பல மொக்கைகள் போட்டிருகொம் .அது இப்படிதான் இருக்கும் என்று யாரும் ஒரு முடிவுரை க்கு வந்தது கிடையாது. இதுவரையில் gang ல 3 பேருக்கு கல்யாணம் ஆயாச்சு .முதல் முறையா இந்த 3 தாய்குலங்களை கூட அழைத்து சென்று நாங்கள் எப்பொழுதும் போடும் ஆட்டமெல்லாம் ஆடி , நிறைய பகிர்ந்து ,யார் மனதும் நோகாமல்(புதுசா கல்யாணம் ஆனவுங்க இல்ல ) வெற்றிகரமா முடித்துதான் இந்த trip இன் சிறப்பம்சம்.Karpi , joshna , chitra ஆகிய மூன்று பேரையும் பற்றி பேசும்பொழுது , dennis ” We welcome the three princess to our group ” ன்னு சொல்லி ஏத்தி விட்டதை மறக்க முடியாது
. இதில் highlight என்னன்னா எல்லாம் காதல கல்யாணங்கள் . அதுனாலயோ என்னமோ முரண்பாடான எண்ணங்கள் யாருக்கும் இல்லை .இனிமேல்தான் இருக்குது கதை
. இரண்டாவது சுவாரசியம் என்று நான் சொன்னது கண்டிப்பாக சுவாரசியமான வகையில் எடுத்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு 40 வயதிருக்கும் நாங்கள் தங்கிருந்த home -stay இன் பெண் உரிமையாளருக்கு. இரண்டாம் நாள் முடிவில் அந்த பெண்மணியின் தனிமையும் பேச்சையும் பார்த்து ஒரு Psycho விடம் வந்து மாடிகொண்டோமட என்று ஒரு முடிவுக்கே வந்துவிட்டோம் . அந்த அளவிற்கு இருந்தது அந்த பெண்மணியின் முரண்பாடான பேச்சும் நடவடிக்கைகளுக்கும் . அதை பற்றி எழுதவேண்டும் என்றல் தனியாக ஒரு blog topic இல் தான் எழுதவேண்டும்.
இன்னொரு முக்கியமான பிரச்னை coorg ல என்னன்னா , நல்ல hotel எ கிடையாது . East end என்கிற ஒரு hotel எ தவிர எல்லாம் ரோட்டு கடை ரகம் . East end hotel கு எப்ப போனாலும் ஊரே அங்கதான இருக்குது.முக்கியமான இடமான தலைக்காவேரி ஐ பார்க்க முடியவில்லை. ஒரு சின்ன ஊற்றிலிருந்துதான் காவேரி நதி துளிர்க்குமாம் . எங்க driver அங்க தண்ணியே இல்லைங்க என்று சொல்லியதால் plan ஐ cancel செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் ground இல cricket விளையாட ஆரம்பித்து விட்டோம் . பிறகு அரை மணி நேர பயணத்தில் இருக்கும் abbey falls கு சென்று வந்தோம். சென்ற இடத்தை விட பயணித்த பாதை அழகாக இருந்தது . விண்ணுக்கும் மண்ணுக்கும் என பாதை மேலயும் கீழையும் மாறி மாறி இருந்தது. 3 ஆம் நாள் rubber boat ல rafting செம்மையா இருக்கும் என்று build -up ஓட போனோம் . rubber boat இருந்தது ஆனால் rafting செய்யுமளவிற்கு தண்ணீர் இல்லை. இருந்தாலும் கெத்து போட்டு அதை ஒட்டிக்கொண்டு மாறி மாறி race வைத்து நேரத்தை போக்கி கொண்டோம்.
சில வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் Coorg பயணம் ,சுற்றி இருக்கும் நண்பர்களின் ஆழத்தை புரிய வைத்து , practical ஆக நிறைய விஷயங்கள் பகிர்ந்து எங்கள் நெருக்கத்தை மேலும் பலப்படுத்தியது. ஒரு நல்ல break கூட. தயவுசெய்து யாரும் Coorg கிற்கு வெயில் காலத்தில் சென்று விடாதீர்கள் .
இதை படிப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
VJ,
Sun TV super 10 partha madhri irundhadhu…
But got ur feel.
Trip next plan panrapa, ask suggestion from Aasha.
I will suggest Wayanaad for you ppl. The Best choice. Im sure – you will love it!
Thanks di! Soora Wayanad poidalaam … kavalapadatha !
Yeppayum pola off seasonla tourist place porathe velaya pochuppa… Seasonla Coorg supera irukkumnu kelvi patrukken…
Anyways i know the group enjoys the company and not the place…I expect a good blog post on the “Psycho Aunty” …
Machi how about a thriller short story in Sujatha Style…
Thanks da !
Thriller story a…. machi, lite a aasa varuthu ! athayum kalutha try panniruvoam ..kaasa panama
!
Machi!!
Your narration style is too good. One suggestion ..put some photos (which u took in Coorg) then n there.. would add more fun in narration..