சில்லுனு ஒரு பயணம் ..
நாமளும் வருஷம் முழுதும் ஊர் ஊரா சுத்திட்டு தான் இருக்கும் …ஆனா சில பயணங்கள் மட்டும் நம்ம மனசுல சும்மா ஜம்முனு உட்காந்துகும் … அது போல ஒரு பயணம் தான் இப்போ நாங்க சென்று வந்த topslip – வால்பாறை பயணம். சொல்லப்போன முதல் நன்றி தோழி சித்ரா வுக்கு தான் சொல்லணும். அவங்க கல்யாணம் வெள்ளி கிழமை நடந்தது. சும்மா இருப்பான நம்ம ஆதி பய, அப்டியே சனி, ஞாயிறு சேர்த்து நச்னு ஒரு plan அ போட்டாப்ல. சூக்கு , அண்ணன் பாஷா போன்ற முக்கிய பிரமுகர்கள் இல்லையென்றாலும் அவங்க நினைவுகள் இருந்துடேதான் இருந்தது…. பட்டறை போடுறதுக்கு topic வேணும்ல
. அப்பப்போ criminals Bals உம் அவரது சிஷ்யனும்(ராஜா) சேந்து கொஞ்சம் entertain பன்னைங்க ..
என்னதான் அழகான மழை பெய்தாலும்..அதற்கு முன் வரும் அந்த பனிகுளிர் காற்று சொல்லிவிடும் அந்த மழையின் அழகை … அது போலதான் பொள்ளாச்சி . வளமான நிலபரப்பு, நீண்டு நிற்கும் தென்னந்தோப்புகள் , பிரமிக்க வைக்கும் அழகான சிறிய வீடுகள்… இதுதான் பொள்ளாச்சி. topslip check-post இல் permission வாங்கின சிறிது நேரத்திலயே நாங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே… காட்டு விலங்குகளின் சொர்க்க பூமி அது போலும். காட்டுபன்றிகள் , யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற மிருகங்களெல்லாம் பார்க்கலாம் என்று சொன்னார்கள்… ஆதி கொஞ்சம் நேரம் கேமரா வை தூக்கிட்டு அலைந்ததுதான் மிச்சம்..
.!! கொஞ்ச நேரத்திலயே ஆதி camera க்கு வேலை வந்திரிச்சு.எங்களுக்கு ஒதுக்கப்பட்ட dormantry யின் அருகாமையில் உள்ள ஒரு அழகான புல்வெளியில் அந்த அரிய காட்சி… யானிகள், மான்கள், காட்டெருமைகள் எல்லாம் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது .. இரவு 9 மணி இருக்கும்.. இரு பக்கமும் வாகனங்களை வைத்து அந்த புள் வெளியில் light அடிச்சு பார்த்தோம்.. கொஞ்ச கொஞ்சமா அப்போதான் topslip இன் மகத்துவம் புரிய ஆரம்பிச்சது… ! அது வரைக்கும் Weather நல்லா இருக்கும்… அப்டியே jolly அ இருந்துட்டு வரலாம் னு நினைச்சுட்டு இருந்தோம்..
… அடுத்த நாள் விடியகாலையில் ELEPHANT feeding 8 மணிக்கு இருக்கும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனார்கள்… என்னதான் காட்டு யானைகள் என்றாலும், நாங்கள் கொடுத்த அந்த கேப்பை களியை அழகா சாப்பிட்டது. அவுங்க கூட்டத்தில பெரிய ஆள் ஒருத்தர் இருக்காராம் ..அவரு பேர் KAPIL DEV.. அங்க இருந்த ஒரு 5- 6 யானைகளில் ரொம்ப சுறுசுறுப்பாய் இருந்தாப்ல.. யானை பாகன் சொன்னது போல நொண்டி அடிச்சார், dance ஆடினார், camera வுக்கு pose கொடுத்தார். இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி பொள்ளாச்சியில் சில காட்டு யானைகள் புகுந்துவிட்டதாம் . Trained யானைகளெல்லாம் கூட்டிட்டு போய் அந்த யானைகளெல்லாம் விரட்டி விட்டங்கலாம்… அதுல KAPIL DEV செம்ம சண்ட போட்டு விரட்டி விட்டாராம். அதன் பிறகு , இரண்டு gang a பிரிஞ்சு trekking மற்றும் பரம்பிக்குளம் அணை க்கு சென்றோம். பரம்பிக்குளம் அணைக்கு செல்ல கேரளா check-post வழியாக செல்ல வேண்டும் . check-post a தாண்டி கொஞ்ச தூரத்திலயே கேரளா வின் trademark “Backwaters”… அதுவும் காடுகளுக்கு நடுவில் “Backwaters”… ! மனசே இல்லை அங்க இருந்து போறதுக்கு.. கிட்டத்தட்ட TRIp ல எடுத்த பாதி pics அங்க எடுத்ததுதான் . இடையில் உலகின் மிக பெரிய Teak மரத்தை கண்டு விட்டு சென்றோம் . அன்று இரவே வால்பாறை க்கு கிளம்பி சென்றோம் . topslip ஐ விட வால்பாறை செல்லும் மலை பாதைகளை நிறையவே ரசிக்க முடிந்தது . topslip இல் அவ்வளவு குளிர் இல்லாததால் வால்பாறை யிலிருந்த ஓரளவு குளிரை நன்றாக அனுபவிக்க முடிந்தது. குறிஞ்சி நிலம் என்பதால் எங்கு சென்றாலும் முருக பெருமானை பார்க்க முடிந்தது. வால்பாறை யில் எங்கு பார்த்தாலும் காண முடிந்த மற்றொண்டு தேயிலை தோட்டங்கள்.
திரும்பின இடங்களில்லாம் மேகங்களையும் சீராக அமைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களும் சேர்த்திருந்தது அருமை. “Seen god” என்ற போர்டு போட்டு இருந்தது. நாங்கள் எதோ நல்லா view என்று நினச்சு சென்றால் அங்கு இருந்தது “கடவுளை கண்டேன்” என்று ஒரு சாமியார் . ராஜா ஆதி ஐ பார்த்து ” Take the pciture of this Old man ” என்று சொல்ல…அதை , ஒரு அழுக்கு வேட்டிஉடன் இருந்த அந்த சாமியார் “Old man is gold man …is’T it”? என்று கேட்டவுடனே எங்களுக்கு ஆர்வம் தொத்தி கொண்டது. அருமையான ஆங்கிலத்தில் பேசினார் . அவரை “YOUTH சாமியார்” என்று கூட சொல்லிகொள்ளலாம் . கடவுளை கண்டதாகவும் ..இதெல்லாம் அவருடைய விளையாட்டு என்றும் சொன்னார். சொல்ல வந்த விஷயத்தில் தெளிவாக இல்லை என்றாலும் , அவருடைய பேச்சை ரசித்தோம் . இரண்டு மூன்று நாட்கள் சுத்தினாலும் , மறக்க முடியாத இடம் ” High Fast” … சிறிது தூரம் நட க வேணும்.. அப்படி ஓர் அமர்களமான view .. எதை பார்த்தாலும் போட்டோ எடுத்து கொண்டிருந்த Lax கூட “இதுக்கு மேல வாழ்கைல என்னடா வேணும்…நிம்மதியா உட்காந்து பாருங்க ட” னு சொன்னான் . அப்படி ஒரு இடம் . குறைஞ்சது ஒரு 7-8 நீர்வீழ்ச்சி யாவது தெரிஞ்சது … சொர்கம் !!!!
எழுது வடிவத்தில் பார்த்ததெல்லாம் எழுத முடியவில்லை என்றாலும் .. வேறு எந்த குழப்பமும் இல்லாமல் மூன்று நாட்களையும் சந்தோஷமாக கொண்டாடினோம். பிரதாப் ஐ அட்டை பூச்சி கடித்தது , ஆதி 15 நிமிஷம் படம் பிடிச்சிட்டு “ச்சே…ஒரு pic கூட விலலட “ னு சொல்றது , அடிக்கடி Lax ராஜா வ வெச்சுபோட்டோ எடுக்கும்போது தலைவர் கொடுக்குற pose(பாவம் அந்த வயிறு) , கட்டை (இளையராஜா ) வின் லீலைகள் (போட்டோ எடுப்பதில்) , Bals இன் criminalism .. .. இன்னும் பல பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகமொத்தம் இனிமையான அனுபவம். .. வால்பாறை ல இருந்து கீழே வந்து கொண்டிருக்கும்போது அடுத்தது “grass hill “ என்று பிளான் a போட்டப்ள ஆதி மறுபடியும்…….

அட்டகாசம் …. Topslip , பொள்ளாச்சி, பரம்பிக்குளம், வால்பாறை .. முக்கியமா High Fast … ஹைய்யோ ஹீரோ தவறவிட்டுட்டேனே
( …. உன்னோட விவரிப்பு படிச்சிட்டு .. அப்டியே கற்பனை செஞ்சு ரொம்ப பொறாமையா இருக்கு
hey i want to visit valpaarai……..paaru sekiram unnaya vittutu naanga oru gang’a poorom..
machi
highFast illada..HighForest
very nice post da.
hey vijay anna….. “சில்லுனு ஒரு பயணம்” – nenga explain panirukradha partha udane anga poganum pola irukku….
unga trip pathi romba super ah sollirkinga……epdi vijay anna
epdi…..?! hmmmm kalakkunga…..!!!!!
Ivana kailaiye pidika mudiyadhe inime!
Expecting more of ur thoughts than ur expr !! : )
dei vijay.. sariyana write up… i just felt as if i went to these places once again ……
Nandri manitha !