உன்னோடு நான் கண்ட சொந்தம்
மண்ணோடு மழை கொண்ட பந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும் …
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை !!
- “உயிரே “
இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ , இரவின் கண்ணீர் நீ !!
- “கன்னத்தில் முத்தமிட்டால் “
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
- “நிழல்கள் ” (வைரமுத்துவின் முதல் படப்பாடல் )
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா
-”அன்பே சிவம் “
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைததாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறைவைக்கிறாய் !!
- “மௌனம் பேசியதே “
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி !!
-”உள்ளம் கேட்குமே “
//உன்னோடு நான் கண்ட சொந்தம்
மண்ணோடு மழை கொண்ட பந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும் …
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை !!//
i absolutely adore this song! fantastic!
Ya .. Ya !! Danks for the comment !!