எழுத்தாளர் சுஜாதா அவர்கள் February 27 ஆம் நாள் காலமானார் .
சுஜாதா (இயற்பெயர் சி.ரெங்கராஜன் ) , தமிழ் படிக்க தெரிந்தோர் மறக்க முடியாத ஒரு முக்கியமான மனிதர் . இதுவரை அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் , தொடர்கதைகள் எழுதிஇருந்தாலும் சில காரணங்களுக்காக அவரை நாம் மறக்க கூடாது . மிக முக்கியமான ஒன்று , ஆங்கிலத்தில் Fiction எனப்படும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மையமாக வைத்து தமிழிலும் கதைகள் தரமாக கொடுக்க முடியும் எண்டு நிரூபித்தவர். இரண்டாவது, james bond , sherlock holmes போன்று கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து தமிழிலும் பற்பல கதைக்களம் அமைக்க முடியும் என்று தன்னுடைய கணேஷ் – வசந்த் கதாபாத்திரங்களின் மூலம் நிரூபித்தவர் . 80 களில் இந்த கணேஷ் – வசந்த கதாபாத்திரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
இவை மட்டுமின்றி மணிரத்னமின் “ரோஜா” பட வசனங்கள் மற்றும் “கன்னத்தில் முத்தமிட்டால்” script இல் முழுமையாக முதிர்ச்சி பெற்ற சுஜாதாவை நாம் காணலாம்.மிக நேர்த்தியான கதை வடிவமைப்பு.
ஒரு புத்தக கண்காட்சியில் அவரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக எந்த பிரபலங்களை பார்த்தாலும் ஆட்டோகிராப் வாங்குவதென்பது எனக்கு அறவே பிடிக்காத ஒன்று. அன்று ஏதோ சுஜாதா அவர்களை பார்த்தவுடன் நான் வாங்கிய புத்தகத்தில் கையெழுத்து வாங்கலாம் எண்டு நினைத்து அவரை அணுகினேன். அவரோ அவர் எழுதிய புத்தகத்தில் மட்டுமே கையெழுத்து இடுவேன் என்று சொல்லி மறுத்துவிட்டார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பல சிறு கதை தொகுப்பினை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ரசிகனானேன் .
அவர் இயற்கை எய்திய விஷயம் கேள்விப்பட்ட பலரின் முதல் கேள்வி “What will happen to Shankar’s “Robo” now?…
தமிழ் மொழி அதன் உன்னத படைப்பாளிகளில் ஒருவரை இழந்து விட்டது !!!!!
[...] சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும் !! [...]
sujatha oru marakkamudiyatha sahaptham.
[...] சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும் !! [...]