சில விஷயங்களுக்கு என்னதான் பதில் கண்டுபிடிச்தாலும் கொஞ்ச நேரத்தில குழம்பிடுவோம்.அந்த மாதிரி topic தான் Life’s objective ஐ கண்டுபிடிக்கிறது. ரெண்டே நேரத்தில மட்டும்தான் எதுக்குடா வாழ்கிறோம் ..வாழ்க்கையோட அர்த்தம் தான் என்ன ?? என்று தோணும்..ஒன்னு ஒரு வேலையும் இல்லாம வெட்டியா இருக்கும்போது ..ரெண்டு எதிபார்ததது நடக்காம போயடும்போது !! இது normal cases. சில பேர் எல்லா விஷயமும் ஒழுங்க நடந்தாலும் எப்ப பாரு “ஏன் வாழ்கிறோம்? எதுக்கு இப்படி பண்றோம் ?” னு யோசிச்சுகிட்டே இருப்பாங்க. அப்டி யோசிச்ச என்ன என்ன பதில்கள் வரலாம் என்று ஒரு வாரம் முழுக்க யோசித்ததின் (சத்தியமா பா ) விளைவுகள் தான் இந்த பதிவு…என் நண்பன் செந்தில்(Rowdy) கேட்ட கேள்விகள் இன்னொரு காரணமாவும் வைத்து கொல்லலாம்.
பரிணாம வளர்ச்சி னு சொல்லுவாங்களே, அதையே கூட நாம நம்மாளோட வாழ்க்கைக்கு முக்கியமான குறிக்கோள் னு சொல்லலாம் .1000 வருஷத்துக்கு முன்னடி நாம இருந்ததுக்கும் , 200 வருஷத்துக்கு முன்னால நாம (மனித இனம்) இருந்ததற்கும் , இப்போ நாம இருப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் . காரணம் பரிணாம வளர்ச்சி . ஆங்கிலத்தில் சொல்ல போன Evolution னு சொல்லுவாங்க.மனித இனம் இந்த பரிணாம வளர்ச்சிய அடயிறதற்கு தெரிஞ்சோ தெரியாமயோ உதவி பண்ணிட்டு இருக்கோம். இதுக்கு மேலேயும் “நாம எதுக்கு இந்த பரிணாம வளாச்சி அடையுனும்??” னு யாரவது கேட்டீர்கள் என்றால் பதில் கடைசியில்.
இதற்கு ஆன்மிக ரீதியில் கூட பதில் சொல்லலாம் . “”கடவுள் இதற்க்காகதான் என்னை படைத்திருக்கிறார். இப்படித்தான் என்னை design செய்திருக்கிறார். நான் இப்படி எல்லாம் செய்ய வேண்டுமென கடவுள் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்திரிக்கிறார்.”" என்று நிறைய பேரின் எண்ணம் இருக்கிறது . நிச்சயமாக தப்பு சொல்லவில்லை. ஆனால் மனிதன் வாழ உயிர் வேண்டும், அந்த உயிர்களை பறித்து விட்டு “கடவுள் ஆணையிட்டார் ” என்று சொல்லும் பல மனிதர்களை இன்னும் இந்த உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஆக, கடவுளின் மேலே பாரத்தை போட்டு விட்டு செல்பவர்கள் சில பேர். அவர்களக்கு வாழ்க்கை என்பது கடவுள் அளித்த வாரம் , கொடுத்த வரத்தை முடிந்த அளவில் adulterate செய்யாமல் வாழ நினைப்பவர்கள் . இதுக்கு அப்புறம் ” So, do you beleive in god?” னு அடுத்த கேள்வி கேட்டீங்கன்னா பதில் கடைசியில்…
அடுத்ததா நம்ம case .. “we should survive coz we have already born here” .. இந்த அடுத்த ஜென்மம் ..போன ஜென்மம்… பாவங்களுக்கு தண்டனை.. புண்ணியங்களுக்கு பரிசுகள் ..இதெல்லாம் ஓரளவிற்கு கேட்டுகிட்டு வாழ்க்கை என்பதை ஒரு phase a(birth-death) பார்க்காம அப்டியே ஓட்டுறது ஒரு ரகம். நம்ம மனசாட்சிய நாம சந்தோஷமா வெச்சுக்கணும் அவ்வளவுதான். இந்த மாதிரி யோசிக்க ஆரம்பித்து விட்டோம் என்றால் ரொம்ப வசதி. திடிர்னு எதோ ஒரு விஷயத்துக்கு சந்தோஷமா இருப்போம்…அடடா , அந்த நேரம் மனது மட்டும் அல்ல, அப்டியே as a whole நம்ம உடல் எல்லாமே சேந்து ஒரு சின்ன பிறவி பயனை அடைந்தது போல ஒரு பீல் இருக்கும். அப்போ யோசிசிகலாம், “ச்சே..நல்ல இருக்கே..இதுக்குதாண்டா இந்த வாழ்க்கை” . இத பல பேர் correct னு சொல்லுவாங்க. அட போங்கடா “சந்தோஷம் தான் வாழ்கைய ?” னு கூவுகிரவர்களுக்கு பதில் கீழே …
இதுக்கு மேலேயும் நான் உளரனும் னு நினைகிறீங்க இல்ல… pls continue!
முதல் வகுப்புல தமிழ் சொல்லிதர்ரங்க , நாளடைவில் நாம கவிதை எழுத ஆரம்பிக்கிறோம். சின்ன வயசுல வேதியல் (Chemistry) சொல்லி தர்றாங்க ..கொஞ்ச நாள் கழிச்சு நாம புதுசு புதுசா மாத்தி மாத்தி போட்டு எதோ கண்டுபிடிக்கிறோம். இந்த மாதிரி நாம வாழும் பயண பத்தியோ , வாழ்கைய பத்தியோ சின்ன வயசுல யாரும் சொல்லிகொடுக்கல , அதுனாலதான் ஆளுக்கு ஒரு மாத்தி யோசிச்சு இப்படி உலகத்தையே ரெண்டக்கிட்டு இருக்கோம்( அப்பாட கடைசியில கேள்வி கேட்காத அளவுக்கு உளறிட்டேன் ) .
இயற்கை இப்படி இருக்கு னு வர்ணிக்கலாம்.. இயற்கை இப்படி மாறும் என யூகிக்கலாம் ஆனால் இயற்கையை கேள்வி கேட்க முடியாது..அது போலதான் வாழ்கையும். இனிமேலும் நீங்கள் கீழே பார்க்க வேண்டிய அவசியம் இல்ல.முடிந்தது .
)))))))))))
hello hero, bayangarama yosichuruka…enna achu? yaaravadhu bulb kuduthutangala?;-)
ஒலகத்துல நம்மளை மாதிரி பைத்தியம் புடிச்சு அலையறவங்க நிறைய பேரு இருக்காங்க போல,
நேரம் கெடைச்சா இதை படிச்சு பாருங்க!
http://simplycvr.blogspot.com/2005/08/destination-unknown.html
Hi da,
Unnoda thinking nalla thaan irukku. But ithu mappula eluthunatha illa nithanathula irukkumpothu eluthunatha …
hi vijay anna….!!
இயற்கை இப்படி மாறும் என யூகிக்கலாம் ஆனால் இயற்கையை கேள்வி கேட்க முடியாது..அது போலதான் வாழ்கையும்……!! nu super ah sollirkenga…!
mummy ’s comment:
“epdi vijay ipdi think panra???? really superb”