Feeds:
Posts
Comments

COORG பயணம் 

“ஏண்டா பரதேசி, trailer ஓட்டுன 1-2  வாரத்துல படம் வரனும்டா..1 மாசம் கழிச்சு வந்த படம் flop ஆயிடும்டா” ன்னு நீங்க சொல்றது கேட்குது . என்னங்க பண்றது Receession , economy slump .:-).வேலை ஜாஸ்தி.
          நம்ம trailer ல சொன்ன மாதிரி , எக்கச்சக்க மண்டகுடைச்ச்சலோட கிளம்பினதுதான் இந்த COORG பயணம் . ” குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ” னு  அழகா நம்ம தலைவர் ராஜா ஒரு பாடு போட்டிருப்பார். அந்த பாட்டு போல இந்த குடகு மலையும் அழகா இருக்கும் னு நினச்சு போன ஏமாற்றம் தான் மிச்சம். வானிலை சிங்கார சென்னை அ விட மோசம். 3 நாட்கள் , இரண்டு இரவுகலென நீடித்த எங்கள் பயணத்தில் 2 நாட்களும் மாலை ஒரு 6 மணிக்கு மேல் வானிலை கொஞ்சம் இதமாக இருந்ததே தவிர செம்ம சூடு . மைசூர் லிருந்து காலை 8 மணிக்கு   கிளம்பி ஒரு 12 மணிக்கு சென்றடைந்தோம் .வானிலையை பற்றி இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
The gang
           இந்த பயணத்தை சுவாரசியம் ஆக்கிய விஷயங்கள் இரண்டு. ஒன்று , நாங்கள் :-) . சிரிக்கதீங்கப்பா . உண்மைதான். என்னதான் மாசத்துக்கு ஒரு தடவ ஊர் சுத்தினாலும் , இந்த trip கொஞ்சம் வித்தியாசமானது. MBA காலத்துல இருந்து ஆரம்பிச்ச இந்த gang வெற்றிகரமா 6  வருடங்கள பற்பல பயங்கரமான பிரச்னையெல்லாம் தூசி தட்டுற மாதிரி தட்டி கெத்து போட்டு வந்த்ருகோம் . நிறைய சமயங்களில் எதிர்காலத்தை பற்றி பேசிக்கொள்ளும் பொழுது  கல்யாணத்து பிறகு நமது life style எப்படி இருக்கும் என்கிற topic இல் பல மொக்கைகள் போட்டிருகொம்  .அது இப்படிதான் இருக்கும் என்று யாரும் ஒரு முடிவுரை க்கு  வந்தது கிடையாது. இதுவரையில் gang ல 3 பேருக்கு கல்யாணம் ஆயாச்சு .முதல் முறையா  இந்த 3  தாய்குலங்களை கூட அழைத்து சென்று நாங்கள் எப்பொழுதும் போடும் ஆட்டமெல்லாம் ஆடி  , நிறைய பகிர்ந்து ,யார் மனதும் நோகாமல்(புதுசா கல்யாணம் ஆனவுங்க இல்ல ) வெற்றிகரமா முடித்துதான் இந்த trip இன் சிறப்பம்சம்.Karpi , joshna , chitra ஆகிய மூன்று பேரையும் பற்றி பேசும்பொழுது , dennis ” We welcome the three princess to our group ” ன்னு சொல்லி ஏத்தி விட்டதை மறக்க முடியாது :-) . இதில் highlight என்னன்னா எல்லாம் காதல கல்யாணங்கள் . அதுனாலயோ என்னமோ முரண்பாடான எண்ணங்கள் யாருக்கும் இல்லை .இனிமேல்தான் இருக்குது கதை :-)
.                 இரண்டாவது சுவாரசியம் என்று நான் சொன்னது கண்டிப்பாக சுவாரசியமான வகையில் எடுத்துக்கொள்வது  கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு 40 வயதிருக்கும் நாங்கள் தங்கிருந்த home -stay இன் பெண் உரிமையாளருக்கு. இரண்டாம் நாள் முடிவில் அந்த பெண்மணியின் தனிமையும் பேச்சையும் பார்த்து ஒரு Psycho விடம் வந்து மாடிகொண்டோமட என்று ஒரு முடிவுக்கே வந்துவிட்டோம் . அந்த அளவிற்கு இருந்தது அந்த பெண்மணியின் முரண்பாடான பேச்சும் நடவடிக்கைகளுக்கும்  . அதை பற்றி எழுதவேண்டும் என்றல் தனியாக ஒரு blog topic இல் தான் எழுதவேண்டும்.
          இன்னொரு முக்கியமான பிரச்னை coorg ல என்னன்னா , நல்ல hotel எ கிடையாது . East end என்கிற ஒரு hotel எ தவிர எல்லாம் ரோட்டு கடை ரகம் . East end hotel கு எப்ப போனாலும் ஊரே அங்கதான இருக்குது.முக்கியமான இடமான தலைக்காவேரி ஐ பார்க்க முடியவில்லை. ஒரு சின்ன ஊற்றிலிருந்துதான் காவேரி நதி துளிர்க்குமாம் . எங்க driver அங்க தண்ணியே இல்லைங்க என்று சொல்லியதால் plan ஐ cancel   செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் ground இல cricket விளையாட ஆரம்பித்து விட்டோம் . பிறகு அரை மணி நேர பயணத்தில் இருக்கும் abbey falls கு சென்று வந்தோம். சென்ற இடத்தை விட பயணித்த பாதை அழகாக இருந்தது . விண்ணுக்கும் மண்ணுக்கும் என பாதை மேலயும் கீழையும் மாறி மாறி இருந்தது. 3 ஆம் நாள் rubber boat ல rafting செம்மையா இருக்கும் என்று build -up ஓட போனோம் . rubber boat இருந்தது ஆனால் rafting செய்யுமளவிற்கு தண்ணீர் இல்லை. இருந்தாலும் கெத்து போட்டு அதை ஒட்டிக்கொண்டு மாறி மாறி race வைத்து நேரத்தை போக்கி கொண்டோம். 
           சில வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் Coorg பயணம் ,சுற்றி இருக்கும் நண்பர்களின் ஆழத்தை புரிய வைத்து , practical ஆக நிறைய விஷயங்கள் பகிர்ந்து எங்கள் நெருக்கத்தை மேலும் பலப்படுத்தியது. ஒரு நல்ல break கூட. தயவுசெய்து  யாரும் Coorg கிற்கு வெயில் காலத்தில் சென்று விடாதீர்கள் . 
      
        இதை படிப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன். 

ஸ்ஸ்ஸ்ஸ் … recession வந்தாலும் வந்துச்சு எங்க பார்த்தாலும் ஆப்புதான் ! இந்த வெயிலும் recession உம் சேர்ந்து குடை குடை னு குடையுது ..ஒரே குஷ்டமப்பா ..சச்சி ..இது ஒரே கஷ்டமப்பா ..lite ஆ இந்த ரெண்டையும் deal பண்றதுக்கு ரொம்ப காலமா plan ல இருந்த எங்களது coorg trip ஐ செயல்படுத்தியாச்சு … எனவே, வெகு விரைவில் ஒரு பயணக்கட்டுரை வந்துகிட்டே இருக்கு ….

தேடல்…

தினம் தினம்
ஆயிரம் முகங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அறிமுகமில்லதா என்னவளின்
புன்னகையை ….

சில்லுனு ஒரு பயணம் ..

நாமளும் வருஷம் முழுதும் ஊர் ஊரா சுத்திட்டு தான் இருக்கும் …ஆனா சில பயணங்கள் மட்டும் நம்ம மனசுல சும்மா ஜம்முனு உட்காந்துகும் … அது போல ஒரு பயணம் தான் இப்போ நாங்க சென்று வந்த topslip – வால்பாறை பயணம். சொல்லப்போன முதல் நன்றி தோழி சித்ரா வுக்கு தான் சொல்லணும். அவங்க கல்யாணம் வெள்ளி கிழமை நடந்தது. சும்மா இருப்பான நம்ம ஆதி பய, அப்டியே சனி, ஞாயிறு சேர்த்து நச்னு ஒரு plan அ  போட்டாப்ல. சூக்கு  , அண்ணன் பாஷா போன்ற முக்கிய பிரமுகர்கள் இல்லையென்றாலும் அவங்க நினைவுகள் இருந்துடேதான் இருந்தது….  பட்டறை போடுறதுக்கு topic வேணும்ல :-) . அப்பப்போ criminals Bals உம் அவரது சிஷ்யனும்(ராஜா) சேந்து கொஞ்சம் entertain பன்னைங்க ..

என்னதான் அழகான மழை பெய்தாலும்..அதற்கு முன் வரும் அந்த பனிகுளிர் காற்று சொல்லிவிடும் அந்த மழையின் அழகை … அது போலதான் பொள்ளாச்சி . வளமான நிலபரப்பு, நீண்டு நிற்கும் தென்னந்தோப்புகள் , பிரமிக்க வைக்கும் அழகான சிறிய வீடுகள்… இதுதான் பொள்ளாச்சி. topslip check-post இல் permission வாங்கின சிறிது நேரத்திலயே நாங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே… காட்டு விலங்குகளின் சொர்க்க பூமி அது போலும். காட்டுபன்றிகள் , யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற  மிருகங்களெல்லாம் பார்க்கலாம் என்று சொன்னார்கள்… ஆதி கொஞ்சம் நேரம் கேமரா வை  தூக்கிட்டு அலைந்ததுதான் மிச்சம்..

 

  

 
 

.!! கொஞ்ச நேரத்திலயே ஆதி camera க்கு வேலை வந்திரிச்சு.எங்களுக்கு  ஒதுக்கப்பட்ட dormantry யின் அருகாமையில் உள்ள ஒரு அழகான புல்வெளியில் அந்த அரிய காட்சி… யானிகள், மான்கள், காட்டெருமைகள் எல்லாம் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது .. இரவு 9 மணி இருக்கும்.. இரு பக்கமும் வாகனங்களை வைத்து அந்த புள் வெளியில் light அடிச்சு பார்த்தோம்.. கொஞ்ச கொஞ்சமா அப்போதான் topslip இன் மகத்துவம் புரிய ஆரம்பிச்சது… ! அது வரைக்கும் Weather நல்லா இருக்கும்… அப்டியே jolly அ இருந்துட்டு வரலாம் னு நினைச்சுட்டு இருந்தோம்.. :-) … அடுத்த நாள் விடியகாலையில் ELEPHANT feeding 8 மணிக்கு இருக்கும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனார்கள்… என்னதான் காட்டு யானைகள் என்றாலும், நாங்கள் கொடுத்த அந்த கேப்பை களியை அழகா சாப்பிட்டது. அவுங்க கூட்டத்தில பெரிய ஆள் ஒருத்தர் இருக்காராம் ..அவரு பேர் KAPIL DEV.. அங்க இருந்த ஒரு 5- 6 யானைகளில்  ரொம்ப சுறுசுறுப்பாய் இருந்தாப்ல..  யானை பாகன் சொன்னது போல நொண்டி அடிச்சார், dance ஆடினார், camera வுக்கு pose கொடுத்தார். இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி பொள்ளாச்சியில் சில காட்டு யானைகள் புகுந்துவிட்டதாம் . Trained யானைகளெல்லாம் கூட்டிட்டு போய் அந்த யானைகளெல்லாம் விரட்டி விட்டங்கலாம்… அதுல KAPIL DEV செம்ம சண்ட போட்டு விரட்டி விட்டாராம். அதன் பிறகு , இரண்டு gang a பிரிஞ்சு trekking மற்றும் பரம்பிக்குளம் அணை க்கு சென்றோம். பரம்பிக்குளம் அணைக்கு செல்ல கேரளா check-post வழியாக செல்ல வேண்டும் . check-post a தாண்டி கொஞ்ச தூரத்திலயே கேரளா வின் trademark “Backwaters”… அதுவும் காடுகளுக்கு நடுவில் “Backwaters”… ! மனசே இல்லை அங்க இருந்து போறதுக்கு.. கிட்டத்தட்ட TRIp ல எடுத்த பாதி pics அங்க எடுத்ததுதான் . இடையில் உலகின் மிக பெரிய Teak மரத்தை கண்டு விட்டு சென்றோம் .   அன்று இரவே வால்பாறை க்கு கிளம்பி சென்றோம் . topslip ஐ விட  வால்பாறை செல்லும் மலை பாதைகளை நிறையவே ரசிக்க முடிந்தது . topslip இல் அவ்வளவு குளிர் இல்லாததால் வால்பாறை யிலிருந்த ஓரளவு குளிரை நன்றாக அனுபவிக்க முடிந்தது. குறிஞ்சி நிலம் என்பதால் எங்கு சென்றாலும் முருக பெருமானை பார்க்க முடிந்தது.  வால்பாறை யில் எங்கு பார்த்தாலும் காண முடிந்த மற்றொண்டு தேயிலை தோட்டங்கள்.

"High Forest " view @ Vaalparai

 திரும்பின இடங்களில்லாம் மேகங்களையும்  சீராக அமைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களும் சேர்த்திருந்தது அருமை. “Seen god” என்ற போர்டு போட்டு இருந்தது. நாங்கள் எதோ நல்லா view என்று நினச்சு சென்றால் அங்கு இருந்தது “கடவுளை கண்டேன்” என்று ஒரு சாமியார் . ராஜா ஆதி ஐ பார்த்து ” Take the  pciture of this Old man ” என்று சொல்ல…அதை , ஒரு அழுக்கு வேட்டிஉடன் இருந்த அந்த சாமியார் “Old man is gold man …is’T it”? என்று கேட்டவுடனே எங்களுக்கு ஆர்வம் தொத்தி கொண்டது. அருமையான ஆங்கிலத்தில் பேசினார் . அவரை “YOUTH சாமியார்” என்று கூட சொல்லிகொள்ளலாம் . கடவுளை கண்டதாகவும் ..இதெல்லாம் அவருடைய விளையாட்டு என்றும் சொன்னார். சொல்ல வந்த விஷயத்தில் தெளிவாக இல்லை என்றாலும் , அவருடைய பேச்சை ரசித்தோம் .  இரண்டு மூன்று நாட்கள் சுத்தினாலும் , மறக்க முடியாத இடம் ” High Fast” … சிறிது தூரம் நட க வேணும்.. அப்படி ஓர் அமர்களமான view .. எதை பார்த்தாலும் போட்டோ எடுத்து கொண்டிருந்த Lax கூட “இதுக்கு மேல வாழ்கைல என்னடா வேணும்…நிம்மதியா உட்காந்து பாருங்க ட” னு சொன்னான் . அப்படி ஒரு இடம் . குறைஞ்சது ஒரு 7-8 நீர்வீழ்ச்சி யாவது தெரிஞ்சது … சொர்கம் !!!!

  எழுது வடிவத்தில் பார்த்ததெல்லாம் எழுத முடியவில்லை என்றாலும் .. வேறு எந்த குழப்பமும் இல்லாமல் மூன்று நாட்களையும் சந்தோஷமாக கொண்டாடினோம்.   பிரதாப் ஐ அட்டை பூச்சி கடித்தது , ஆதி 15 நிமிஷம் படம் பிடிச்சிட்டு “ச்சே…ஒரு pic கூட விலலட  “   னு சொல்றது , அடிக்கடி Lax ராஜா வ வெச்சுபோட்டோ எடுக்கும்போது தலைவர் கொடுக்குற pose(பாவம் அந்த வயிறு) , கட்டை (இளையராஜா ) வின் லீலைகள் (போட்டோ எடுப்பதில்) , Bals இன் criminalism .. .. இன்னும் பல பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகமொத்தம் இனிமையான அனுபவம். .. வால்பாறை ல இருந்து கீழே வந்து கொண்டிருக்கும்போது அடுத்தது “grass hill “   என்று பிளான் a போட்டப்ள ஆதி மறுபடியும்…….

It’s been sometime I logged in to write something. So decided writing on Dasavatharam. And this is definitely not a review. I have come across hundreds. Just wanted to share what I felt about after watching a movie. First appreciation (and all the appreciation)  goes to Dr.Kamalhasan for having guts to come up with a story like this in Kollywood and Tollywood.Both Chaos theory and butterfly effect  would be little difficult to understand even if you learn it from Wikipedia. But he has succeeded in making a major chunk of people understand. Those Ten roles… mind blowing. I think Kamal himself has dubbed for all the roles. Just think about the difficulty the whole unit would have come across when they had to re-shoot the same scenes since they need to shoot atleast 2 kamalhasan in the major portion of the film. And the issues he had actually discussed apart from the main story line are an instance of Kamal’s brilliance. He points out “Manal Mafia”, “Dumbness of Bush” etc… The story line is simple and sensible. He tries to prove the Chaos theory and the butterfly effect theory. Simple as that. Still I can see lots of reviews stating that there is no strong story line. Probably they expect some family sentiments and same old story of twists and turns in love and life. We people appreciate films like “Babel”, “Crash” because you never know about those directors and when someone from our own country tries it, we negate it. Kamal is one among very few people who are aware of international film making standards and he tries taking Indian films to the next level. Virumandi is one such film where he blends our cultural richness and a very intelligent new way of story-telling but we don’t see the big picture and point out that the name ”Sandiyar” creates “Kalachara Seerazhivu”(meaning the name hurts the cultural sentiment). In short, even if the film has some hiccups like kamal(govind Ramasamy) escapes from Flitcher at least a dozen of times by jumping from the bridge, the film has to be received on a positive note since it will definitely act as a strong catalyst in taking our film industry to the next level.

 

ஒரு 3  வருஷத்துக்கு முன்னாடி..எப்பயாவது hindi  சேனல் பார்த்த சின்ன சின்ன குழந்தைங்க செம்ம டான்ஸ் அடிகிட்டு இருக்கும்…அத judge பண்றதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு 4-5 பேர் உட்காந்து மார்க் போட்டுட்டு இருப்பாங்க…. அதுவே கொஞ்சம் ஆங்கில புலமை இருப்பவர்கள் , 4 – 5  வருஷத்துக்கு முன்னாடி star world மாதிரி English channels ல இதே concept உள்ள programes அ பாத்துருகலாம் …   அது இப்டி அப்டி  னு travel பண்ணி நம்ம Vijay tv கு வந்தது…  !! சூப்பர் dancer..  jodi no 1 னு சொல்லிட்டு ஆரம்பிச்சாங்க… நல்ல concept ! நிறைய திறமைகள வெளிய கொண்டு வந்தாங்க…யார் கிட்ட இருந்து ? நமக்கு தெரிஞ்ச  tv  artists கிட்ட இருந்து ! இத copy அடிச்சு மத்த  channels பண்ற கூத்து இருக்கே….அடடடா சொல்லி மாளாது !கதை கந்தல் . பாதி பேருக்கு டான்ஸ் ஆடுகிறது ஒரு  கனவாவே இருந்திருக்கு ..கிடச்துட  chance னு ஒரு டான்ஸ் மாஸ்டர் அ hire பண்ணிபாங்க… பாவம் அந்த மனுஷன் தான் ! 20 ஸ்டெப் சொல்லி தந்தார்ன ஒரு 2 ஸ்டெப் தான் நம்மாளுங்களுக்கு வரும் .. ! 20 % தான் dance.. 80 %  அவங்க எடுக்குற theme, கதை, முக பாவனைகள் (பரத நாட்டியமாட ஆடுறாங்க…செம்ம குத்து குத்திட்டு இருக்காங்க) மற்றும் மிக முக்கியமான ஒன்று Chemistry (jodi no 1 ல இந்த விஷயம் okay …but இத copy அடிக்கிற எல்லா programe ளையும் concept அ  மறந்துட்டு “Chemistry இல்ல” னு சொல்ரணுவ ) இதெல்லாம் வெச்சு தேசிடே பண்ணுவாங்களாம்  .. இது பரவாயில்ல , சில பேர் preview அப்போ “எங்களுக்கு shooting இருந்தது ..இருந்தாலும் கிடச்ச கொஞ்ச நேரத்துல ஆட கத்துகிட்டோம் ” னு சொல்ரணுவ… பாத்தா  எல்லாரும் Mega serial ல நடிகிரவனுங்க … முடியலடா டேய் !  இதெல்லாம் shoot பண்ற camera man க்கு என்ன தொனிச்சுனு தெரியல, நம்ம மனசு பாதிச்சிர கூடாதே னு அவங்க ஆடும்போது.. கஷ்டப்பட்டு camera வ மேலயும் கீழயும் shake பண்றாரு.. அப்டியாவது dance ஆடுகிறது மாதிரி தெரியட்டும் னு ! Vijay tv ல ஒரு வளரும் நடிகர் judge அ இருக்கும்போது பிரச்னை பன்னனுதுல இருந்து அதுவும் இப்போ ஒரு fashion. எவன் judge அ வந்தாலும் எதாவது பிரச்னை பண்ணனும் னு கொண்டு வந்துட்டாங்க . Now, these kind of programes has everything except  Quality. உட்காந்து பாத்த நல்ல டைம் பாஸ் ஆகும்.. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்த “ஆட நாமளே dance ஆடலாம் போலிருக்கே ” னு ஒரு thought உம் வரும் ! எது எப்டியோ… புதுசா யாரவது ஒருத்தர் பண்ணா… அது மாதிரி கொஞ்சம் யோசிக்கணுமே தவிர..அதையே copy அடிச்சு கேவலப்படுத்த கூடாது ..  !

சாதனை

வாழ்கையில் என்னதான் சாதிததாய்
என்று எவரும் கேட்டால்
தைரியமாக சொல்
என் கவிதைகளுக்கும் கனவுகளுக்கும்
நீதான் கதாநாயகி என்று …

- வீஜே

உன்னோடு நான் கண்ட சொந்தம்
மண்ணோடு மழை கொண்ட பந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும் …

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை !!
- “உயிரே “

இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும்  நீ
இரவல் வெளிச்சம் நீ , இரவின் கண்ணீர்  நீ !!
- “கன்னத்தில் முத்தமிட்டால் “

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
- “நிழல்கள் ” (வைரமுத்துவின் முதல் படப்பாடல் )

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா
-”அன்பே சிவம் “

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைததாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறைவைக்கிறாய் !!
- “மௌனம் பேசியதே “

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி !!
-”உள்ளம் கேட்குமே “

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் February 27 ஆம் நாள் காலமானார் .

  சுஜாதா (இயற்பெயர் சி.ரெங்கராஜன் ) , தமிழ் படிக்க தெரிந்தோர் மறக்க முடியாத ஒரு முக்கியமான மனிதர் . இதுவரை அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் , தொடர்கதைகள் எழுதிஇருந்தாலும் சில காரணங்களுக்காக அவரை நாம் மறக்க கூடாது . மிக முக்கியமான ஒன்று , ஆங்கிலத்தில் Fiction எனப்படும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மையமாக வைத்து தமிழிலும் கதைகள் தரமாக கொடுக்க முடியும் எண்டு நிரூபித்தவர். இரண்டாவது, james bond , sherlock holmes போன்று கதாப்பாத்திரங்களை  மையமாக வைத்து தமிழிலும் பற்பல கதைக்களம் அமைக்க முடியும் என்று  தன்னுடைய கணேஷ் – வசந்த் கதாபாத்திரங்களின் மூலம் நிரூபித்தவர் . 80 களில் இந்த கணேஷ் – வசந்த கதாபாத்திரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
       இவை மட்டுமின்றி மணிரத்னமின் “ரோஜா” பட வசனங்கள் மற்றும் “கன்னத்தில் முத்தமிட்டால்”    script இல் முழுமையாக முதிர்ச்சி பெற்ற சுஜாதாவை நாம் காணலாம்.மிக நேர்த்தியான கதை வடிவமைப்பு.
   ஒரு புத்தக கண்காட்சியில் அவரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக எந்த பிரபலங்களை பார்த்தாலும் ஆட்டோகிராப் வாங்குவதென்பது எனக்கு அறவே பிடிக்காத ஒன்று. அன்று ஏதோ சுஜாதா அவர்களை பார்த்தவுடன் நான் வாங்கிய புத்தகத்தில் கையெழுத்து வாங்கலாம் எண்டு நினைத்து அவரை அணுகினேன். அவரோ அவர் எழுதிய புத்தகத்தில் மட்டுமே கையெழுத்து இடுவேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.  அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பல சிறு கதை தொகுப்பினை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ரசிகனானேன் .
அவர் இயற்கை எய்திய விஷயம் கேள்விப்பட்ட பலரின் முதல் கேள்வி “What will happen to Shankar’s “Robo” now?… 

தமிழ் மொழி அதன் உன்னத படைப்பாளிகளில் ஒருவரை இழந்து விட்டது !!!!! 

  சில விஷயங்களுக்கு  என்னதான் பதில் கண்டுபிடிச்தாலும் கொஞ்ச நேரத்தில குழம்பிடுவோம்.அந்த மாதிரி topic தான் Life’s objective ஐ கண்டுபிடிக்கிறது.  ரெண்டே நேரத்தில மட்டும்தான் எதுக்குடா வாழ்கிறோம் ..வாழ்க்கையோட அர்த்தம் தான் என்ன ?? என்று தோணும்..ஒன்னு ஒரு வேலையும் இல்லாம வெட்டியா இருக்கும்போது ..ரெண்டு எதிபார்ததது  நடக்காம போயடும்போது !! இது normal cases. சில பேர் எல்லா விஷயமும் ஒழுங்க நடந்தாலும் எப்ப பாரு “ஏன் வாழ்கிறோம்? எதுக்கு இப்படி பண்றோம் ?” னு யோசிச்சுகிட்டே இருப்பாங்க. அப்டி யோசிச்ச என்ன என்ன பதில்கள் வரலாம் என்று ஒரு வாரம் முழுக்க யோசித்ததின் (சத்தியமா பா ) விளைவுகள் தான் இந்த பதிவு…என் நண்பன் செந்தில்(Rowdy) கேட்ட கேள்விகள் இன்னொரு காரணமாவும் வைத்து கொல்லலாம்.

      பரிணாம வளர்ச்சி னு சொல்லுவாங்களே, அதையே கூட நாம நம்மாளோட வாழ்க்கைக்கு முக்கியமான குறிக்கோள் னு சொல்லலாம் .1000 வருஷத்துக்கு முன்னடி நாம இருந்ததுக்கும் , 200 வருஷத்துக்கு முன்னால நாம (மனித இனம்) இருந்ததற்கும் , இப்போ நாம இருப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் . காரணம் பரிணாம வளர்ச்சி . ஆங்கிலத்தில் சொல்ல போன Evolution னு சொல்லுவாங்க.மனித இனம் இந்த பரிணாம வளர்ச்சிய அடயிறதற்கு தெரிஞ்சோ தெரியாமயோ உதவி பண்ணிட்டு இருக்கோம். இதுக்கு மேலேயும் “நாம எதுக்கு இந்த பரிணாம வளாச்சி அடையுனும்??” னு யாரவது கேட்டீர்கள்  என்றால் பதில் கடைசியில்.

  இதற்கு ஆன்மிக ரீதியில் கூட பதில் சொல்லலாம் . “”கடவுள் இதற்க்காகதான் என்னை படைத்திருக்கிறார். இப்படித்தான் என்னை design செய்திருக்கிறார். நான் இப்படி எல்லாம் செய்ய வேண்டுமென கடவுள் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்திரிக்கிறார்.”" என்று நிறைய பேரின் எண்ணம் இருக்கிறது . நிச்சயமாக தப்பு சொல்லவில்லை. ஆனால் மனிதன் வாழ உயிர் வேண்டும், அந்த உயிர்களை பறித்து விட்டு “கடவுள் ஆணையிட்டார் ” என்று சொல்லும் பல மனிதர்களை இன்னும் இந்த உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஆக, கடவுளின் மேலே பாரத்தை போட்டு விட்டு செல்பவர்கள் சில பேர். அவர்களக்கு வாழ்க்கை என்பது கடவுள் அளித்த வாரம் , கொடுத்த வரத்தை முடிந்த அளவில் adulterate செய்யாமல் வாழ நினைப்பவர்கள் . இதுக்கு அப்புறம் ” So, do you beleive in god?” னு அடுத்த கேள்வி கேட்டீங்கன்னா பதில் கடைசியில்…

  அடுத்ததா நம்ம case .. “we should survive coz we have already  born here” .. இந்த அடுத்த ஜென்மம் ..போன ஜென்மம்… பாவங்களுக்கு தண்டனை.. புண்ணியங்களுக்கு பரிசுகள் ..இதெல்லாம் ஓரளவிற்கு கேட்டுகிட்டு வாழ்க்கை என்பதை  ஒரு phase a(birth-death)  பார்க்காம  அப்டியே ஓட்டுறது ஒரு ரகம். நம்ம மனசாட்சிய நாம சந்தோஷமா வெச்சுக்கணும் அவ்வளவுதான். இந்த மாதிரி யோசிக்க ஆரம்பித்து விட்டோம் என்றால் ரொம்ப வசதி. திடிர்னு எதோ ஒரு விஷயத்துக்கு சந்தோஷமா இருப்போம்…அடடா , அந்த நேரம் மனது மட்டும் அல்ல, அப்டியே as a whole நம்ம உடல் எல்லாமே சேந்து ஒரு சின்ன பிறவி பயனை அடைந்தது போல ஒரு பீல் இருக்கும். அப்போ யோசிசிகலாம், “ச்சே..நல்ல இருக்கே..இதுக்குதாண்டா  இந்த வாழ்க்கை”  . இத பல பேர் correct னு சொல்லுவாங்க. அட போங்கடா “சந்தோஷம் தான் வாழ்கைய ?” னு கூவுகிரவர்களுக்கு பதில் கீழே …

    இதுக்கு மேலேயும் நான் உளரனும் னு நினைகிறீங்க இல்ல… pls continue!

   முதல் வகுப்புல தமிழ் சொல்லிதர்ரங்க , நாளடைவில் நாம கவிதை எழுத ஆரம்பிக்கிறோம். சின்ன வயசுல வேதியல் (Chemistry) சொல்லி தர்றாங்க ..கொஞ்ச நாள் கழிச்சு நாம புதுசு புதுசா மாத்தி மாத்தி போட்டு எதோ கண்டுபிடிக்கிறோம். இந்த மாதிரி நாம வாழும் பயண பத்தியோ , வாழ்கைய பத்தியோ சின்ன வயசுல யாரும் சொல்லிகொடுக்கல , அதுனாலதான் ஆளுக்கு ஒரு மாத்தி யோசிச்சு இப்படி உலகத்தையே ரெண்டக்கிட்டு இருக்கோம்( அப்பாட கடைசியில கேள்வி கேட்காத அளவுக்கு உளறிட்டேன் ) .

இயற்கை இப்படி இருக்கு னு வர்ணிக்கலாம்.. இயற்கை இப்படி மாறும் என யூகிக்கலாம் ஆனால் இயற்கையை கேள்வி கேட்க முடியாது..அது போலதான் வாழ்கையும். இனிமேலும் நீங்கள் கீழே பார்க்க வேண்டிய அவசியம் இல்ல.முடிந்தது . :) )))))))))))

Older Posts »